Published Date: May 14, 2025
CATEGORY: CONSTITUENCY

சுப்ரமணியபுரத்தில் ரூ.10 லட்சத்தில் ஆழ்துளை கிணறுகள்:
மதுரை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மதுரை மாநகராட்சி மத்திய சட்டமன்ற உறுப்பினர் தொகுதியில் மேம்பாட்டு நிதியில் இருந்து மண்டலம் 3 வார்டு எண். 77 சுப்பிரமணியபுரம் தெற்கு சண்முகபுரம், சகாய மாதா பள்ளி அருகில் ரூபாய் 5 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆழ்துளை கிணறு, வார்டு எண். 77 சுப்பிரமணியபுரம் சுண்ணாம்பு காளவாசல் அருகில் ரூபாய் 5 இலட்சம், மதிப்பீட்டில் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள என இரு ஆழ்துளை கிணறுகள் மற்றும் சின்டெக்ஸ் தொட்டிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மேயர் இந்திராணி பொன் வசந்த் முன்னிலை வகித்தார். துணை மேயர் நாகராஜன், மண்டல தலைவர் பாண்டிச்செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Media: Dinakaran